வாய்மை செய்திகள்: தேனி மாவட்டம் தெற்கு தி.மு.க மாணவரணி இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

25.02.2025, தேனி ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் தெற்கு தி.மு.க மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் தி.மு.க மாணவரணி சார்பில் ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்தும், ஒன்றிய அரசு […]

Continue Reading

தேனி மாவட்டம் கம்பத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் சோதனை.

25.02.2025, கம்பம், தேனி மாவட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் உணவு பாதுகாப்புதுறை நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் நேரடி சோதனை. தேனி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறைக்கு நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் மூலம் உணவு பாதுகாப்புத்துறையினர் கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட உணவு […]

Continue Reading

மின் மோட்டார் பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய மனு அளித்த விவசாயிகள்!

25.02.2025, தேனி விவசாய நிலங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உத்தமபாளையம் விவசாயிகள். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் என்ற குரும்பபட்டி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நிலங்களில் கடந்த ஒரு வருடமாக தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்கள், மின் வயர்கள், சொட்டுநீர் […]

Continue Reading

ஆண்டிபட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

24.02.2025, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மிக விமர்சையாக நடத்தினார்கள். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ மற்றும் மஞ்சள் குங்குமம் […]

Continue Reading

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!

23.02.2025, சின்னமனூர்,தேனி மாவட்டம் தேனி மாவட்டம் சின்னமனூரில் 250 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தேனி மாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பாக, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு எல்கை பந்தயம் நடத்தினர். இந்தப் போட்டியை ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் துவக்கி வைத்தார். துவக்கி […]

Continue Reading

சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்!

22.02.2025 – சுருளி, தேனி மாவட்டம் தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சுருளி அருவி பகுதி மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் யானைக் கூட்டங்கள் முகாமிட்டு […]

Continue Reading

கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஆலோசனைக் கூட்டம்!

தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசிகள் கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது. கடத்தல் தடுப்பதற்காக இரு மாநில அதிகாரிகளும் தேனி மாவட்டம் கம்பம் நகரமன்ற கூட்டுறங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் […]

Continue Reading