வாய்மை செய்திகள்: தேனி மாவட்டம் தெற்கு தி.மு.க மாணவரணி இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியா முக்கிய செய்திகள்

25.02.2025, தேனி

ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் தெற்கு தி.மு.க மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் தி.மு.க மாணவரணி சார்பில் ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக கூறியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்தும், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தி.மு.க தெற்கு மாவட்டம் மற்றும் கூட்டணி கட்சி மாணவரனியினர், இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.