தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பகுதியில் இருந்து ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசிகள் கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது.
கடத்தல் தடுப்பதற்காக இரு மாநில அதிகாரிகளும் தேனி மாவட்டம் கம்பம் நகரமன்ற கூட்டுறங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு காவல் துறையினர், பொது விநியோகத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை உதவி மாவட்ட வழங்கள் அலுவலர் திரு.ஜலால் அவர்கள் நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ரேஷன் அரிசி, அரிசி ஆகவும் மற்றும் மாவாகவும் கடத்தப்படுவதை அதிகப்படியான அதிகாரிகளை பணியில் அமர்த்தி தடுக்கப்பட வேண்டும், ரயில்கள் மூலம் கடத்தப்படுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று ரயில் நிறுத்தங்களிலும் அதிகப்படியாக சோதனைகள் நடத்த வேண்டும், ஐயப்பன் கோவில் சீசன் முடிந்து விட்டதால் கேரளா செல்லும் பேருந்துகளிலும் நாம் சோதனை செய்ய வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
