24.02.2025, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மிக விமர்சையாக நடத்தினார்கள்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ மற்றும் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி ஐந்து வகை உணவுகளை வழங்கினார்கள்.
மேலும் விழாவில் அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் குறித்தும், கர்ப்பகால முன் பின் பராமரிப்பு, குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள்,
குழந்தை வளர்ப்பது, தடுப்பூசிகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
இந்த விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட மருத்துவர்கள்,மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், செவிலியர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் சமுதாய வளைகாப்பு சீர்வரிசையினை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.
